ஞாயிறு, 10 மார்ச், 2013

பெண்களே உங்களுக்களுக்குள்ளே  பல மாற்றங்களை கொண்டு  வருவது  மிகவும் அவசியாமானது 

உலக மகளிர் தினத்தை கொண்டாடிய பெண்மணிகளே !!! நாம் இவ்வளவு நாட்களாக என்னத்தை சாதித்தோம் .... சற்று  யோசித்து பாருங்களேன் ..... எப்பப்பார்த்தாலும் ஆண்களை பற்றியே குறை சொல்லிக்கொண்டே இருப்போம் .  அவர்கள் மீது ஏதாவது பழி போடாட்டால் நமக்கு தூக்கமே வராது ,  அவர்களோடு சண்டையும் போடுவோம் , அவர்களையே நச்சரிப்போம் ...  அவர்கள் சும்மா இருந்தால் வம்புக்கு இழுப்போம் .... ஏதாவது நொச்நொச்சென்று அவர்களோட   மண்டையை  போட்டு அரிப்போம் ... எல்லாத்துக்கும் ஆண்கள் பொறுமையா இருப்பார்கள் .... எதுக்கும்  வாயே  திறக்க மாட்டார்கள் ......  இதைபத்தி நாம் யோசித்து இருப்போமா ....  பெண்களே இதைபற்றி  யோசிக்கவே இல்லைனா.... இப்பவாது கொஞ்சம் நேரத்தை இதுக்காகவாவது  ஒதுக்குங்கள் !!!

மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது ....  புதுடில்லியிலிருந்து  வெளிவருகிற  டைம்ஸ்  ஆப்  இந்தியாவில் இந்தியாவின் தலைநகரம் புதுதில்லி  பெண்களுக்கு பாதுக்காப்பான இடமில்லை என்று கொட்டை  எழுத்தில் செய்தியாக வந்தது . சமீபத்த்தில் நிகழ்ந்த நிர்பயாவின் பாலியல் கற்பழிப்பு  புதுடில்லியையே அதிர வைத்தது ... பெண்களை பீதிக்குள்ளாகியது ....  நிர்பயாவின் மரணம் இந்தியப் பெண்மணிகளின் மரத்துபோன விழிப்புணர்வுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது .... ஆனால் நிர்பயாவுக்கு முன்னால்  எத்தனையோ பெண்கள் பாலியல் கற்பழிப்புக்கு  உட்படுத்தபட்டிருகிறார்கள் .... இந்த சம்பவத்துக்கு பின்பும் பெண்கள் இம்மாதிரி கொடுமைகளுக்கு  ஆளாகியும்  வருகிறார்கள் . ஒவ்வொருத்தருக்கும்  பாதுகாப்பான வாழ்க்கையை தருவது ஒரு நாட்டினுடைய கடமை . ஆனால் நாட்டின் குடிமக்களாகிய நாம் இதை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டாமா ...! அதிலும் பெண்கள் தங்களுடைய  உரிமையை ஆண்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். தாங்களாகவே தவறுகளை இழைத்துவிட்டு , ஆண்கள் எங்களை  சுதந்திரமாக வாழ விடவில்லைஎன்றும் ,   எங்களுக்கென்ற சுயமரியாதையை இழந்து விட்டோம்யென்றும், அவர்களுக்கு நாங்கள் ஒரு கைப்பொம்மையாக இருக்கிறோம் .... எங்களுடைய  கருத்துக்கள் எடுத்துகொள்ளப் பட வில்லை  எனறும் , இன்னும் எத்தனையோ குற்றங்கள் ..... அத்தனையும் கேட்டு கேட்டு சலித்து விட்டதய்யா .....      யாரை  குறை சொல்வது ?....

ஆண்களைவிட பெண்கள்தான் தங்களுக்குள் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் . தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு பெண்ணுடைய அழகையோ , திறமையையோ , புத்திசாலித்தனத்தையோ  எப்போதும் பாராடியதில்லையே , நாம் எப்போதும் சந்திக்கிற நிகழ்வுகளை கவனித்து பார்ப்போமே ....  ஒரு குண்டான பெண் சட்டென்று அறைக்குள் நுழையும்போது இவ எவ்வளவு குண்டாகயிருக்கிரா .... எந்த  கடையினுடைய அரிசியை சாப்பிடுகிறா  ....நான் அவளைவிட ஒல்லியாக இருக்கிறேன் என்றொரு  பெருமூச்சு .....  அதுபோல ஒரு தாய்  குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடக்கவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஏதோவொரு காரணத்தால்  கலந்துகொள்ள முடியாமல் போனதால், அவளைபற்றி மற்ற பெண்கள் இவ என்ன தாய் ?.... என்றொரு கேள்விக்குறி .... ஏன் ஒரு பெண் இன்னொரு பெண்ணை எதிரியாகவே நினைகிறார்கள் ....  இப்படிப்பட்ட  குணத்தை மாத்திக்கொண்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும் !!!...

அலுவலகத்தில் அன்றாட நிகழும் சம்பவங்கள் ..... பெண்கள், ஆண்களோடு  தங்களை சமமாக என்ன வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார்கள் .... அன்றும், இன்றும், எப்போதும் ஆண்கள் பெண்களை குறைத்து எடை  போடவில்லை ..... அவர்களை தங்களோடு சமமாகவே எண்ணுகிறார்கள் ..... இதற்கு சின்ன உதாரணம் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் . பிரதான இலக்கை ஒரு குறிப்பிட்ட காலவரையில் முடிப்பதற்காக உயர் அதிகாரி அலுவலகத்தில்  பணிபுரியும் ஆணும் பெண்ணும் சேர்ந்த குழுமத்திடம்  சரிசமமாக ஒப்படைகிறார், அதிகாரி பாகுபாடு பார்க்கவில்லை. முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது  பெண்கள் அப்படிப்பட்ட சுழ்நிலையிலிருந்து விலகி விடுகிறார்கள் , முடிவுகள் தவறாக ஆகிவிட்டால் உயர் அதிகாரியிடமிருந்து தப்பித்துக்கொண்டு விடலாமில்லையா .....  பெண்கள், அவர்களுக்கு என்று  கொடுக்கப்பட்ட உரிமையை தன்னோடு சரிசமமாக பணிபுரியும் ஆணிடம் கொடுத்துவிட்டு , மீண்டும் அவர்களையே குறை சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது .எதையும் எதிர்கொள்கிற சக்தியும் நம்மிக்கையும் இருந்தால்தான் பெண்கள் ஆண்களோடு சரிசமமாக போற்றப்படுவார்கள் , இல்லையேல்  வெறும் கைபொம்மை தான் !!!....

அடுத்து சொத்துரிமையில் தங்களுக்கும் பங்குயிருப்பதை உணர வேண்டும்.  ஒரு பெண், திருமணத்துக்கு பிறகு பிறந்த வீட்டு சொத்தில் எந்த உரிமையும் கிடையாது என்று எண்ணிக்கொண்டிருந்தால், அது அவளுடைய முட்டாள்தனம் .  சொத்து கிடைக்கவில்லை என்றாலும் நீதிமன்றக்  கதவை தட்டுவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள் , சொந்த அண்ணன் தம்பியோடு சொத்துக்காக சண்டை போடுவதா என்று நினைக்கும் பெண்கள் தங்களோட உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள் .

வீட்டிலும் ,  பணிபுரியுமிடத்திலும் முடிவுகள் எடுக்கும்போது உங்களுடைய கருத்துகளையும் கேட்கவெண்டும் . இப்படிப்பட்ட சுழ்நிலையை பெண்கள்தான் உருவாக்க வேண்டும் .  நமக்கு வேண்டிய தேவைகள் வீட்டில் கிடைக்கிறதென்றும் , அலுவலகம்  நமக்கு தவறாது  சம்பளம் கொடுக்கிற தென்றும் ,எது எக்கேடு கேட்டுபோனாலுமென்ன என்ற எண்ணத்தோடு இருக்கிற பெண்கள், பிறகு வேதனைப்பட்டோ , வருத்தப்பட்டோமானால் பிரயோசனமில்லை . பெண்களுடைய  இப்படியான சால்சாப்பு வியப்பை கொடுக்கிறது .


பிறந்த வீட்டில் அடககமான பெண்ணாகவும் , திருமணத்துக்கு பின்பு கணவனக்கு  ஏத்த மனைவியாகவும் ,  பிள்ளைக்கு ஒரு அன்பு நிறைந்த தாயாகவும் ,  ஒரு நல்ல சகோதரியாக , தோழியாக என்று பல முகங்களை கொண்டவள்தான் இந்தியப்பெண் ,  இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதையையும்  , உரிமையையும் விட்டுக்கொடுத்தல் கூடாது ... இதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும் .







ஞாயிறு, 27 ஜனவரி, 2013

இன்று ஒரு நிர்பயா 

அதர்மத்தை அழித்த ஸ்ரீராமர் 
தர்மத்தை காத்த கிருஷ்ண பரமாத்மா 
அவதரித்த மண்ணில் 
பிறந்தேனென்று 
பெருமையோடு சொல்லும் 
இந்தியனே ......


நாட்டை 
தாயாக போற்றும் 
இந்தியனே........ 
இன்று பாரதம் 
ஒரு பெண்ணுக்கு 
இப்படியொரு கொடூரம் 
இழைத்திருக்கிறது .......

பெண்ணை 
சக்தியாக மதிக்கும் 
இந்தியனே .......
இன்று தாயகம் 
பெண்ணுக்கு 
பாதுகாப்புத் தர 
மறுத்திருக்கிறது ......

உலகமே 
வியந்து பாராட்டிய 
பெண்மைக்கு 
இன்று தேசம் 
கேவலத்தை 
கொடுத்திருக்கிறது .......


பெண்கள் 
எத்தனை காலங்கள் 
கூண்டுக் கிளியாக 
வாழ வேண்டும் .......
நடை பிணமாக 
நடக்க வேண்டும் ........


இன்று 
ஒரு நிர்பயா 
இன்னும் 
எத்தனை நிர்பாயக்களோ ...........





புதன், 16 மார்ச், 2011

மும்பையின் மறுபக்கம்

மும்பை ஒரு மெட்ரோ நகரம் . மும்பையினுடைய கிழக்குத்திசை , மேற்குத்திசை இரண்டையும் பிரித்துக் கொண்டு நிரம்பி வழியும் ஜனத்தொகையோடு ஓடுகிற லோகல் டிரெயின், அதிகாலையிலே அந்த லோகல் டிரெயின் 80 சதவிகத ஜனத்தொகையை அனுதினமும் ஏற்றிக்கொண்டு ஓடுகிறது. பொழுது விடிந்த வண்ணம்தான் அவ்வளவு பரபரப்பாக செயல்படுகிற மும்பை நகரவாசிகள் அதாவது விடியற்காலையில் தொடங்கிய இந்த பரபரப்பு நள்ளிரவுயாகியும் முடிந்தபாடில்லை . காலம்காலமாக மும்பையின் பெருமைகளை நாம் வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறோம் . வணிகமென்று சொன்னால் உதடுகள் மும்பையினுடைய பெயரைத்தான் முணுமுணுக்கிறது, ஆங்கிலேயர் காலத்திலிருந்து வணிகத்துறையில் ஒரு முக்கிய அங்கமாக வகித்துவந்த மும்பை இன்றும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறது . மும்பையினுடைய வணிகத்தால் அந்நிய கருவூலம் செழிப்படைகிறது . வயித்துபிழைப்புக்காக, வேறு மாநிலத்திலிருந்து மும்பைக்கு வருகிற ஒவ்வொருத்தனுடைய கைகளில் கத்தைகத்தையாக நோட்டுக்கள் புழங்குகிறது , இந்த நகரத்துக்கு வந்த ஆண்டியும் அரசனாகி விடுகிறான். சௌபாட்டியில் வேர்கடலை வியாபாரியின் கைகளில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுக்களிருப்பது சர்வசாதாரண விஷயமாகும் . ஆனால் நம்மைப் போன்ற சுற்றுலா பயணிகளுக்கு இந்த விஷயம் வியப்பாகயிருக்கலாம், இது மும்பைவாசிகளுக்கு உப்புச்சப்பில்லாத விஷயமாகும் . மகாலட்சுமியும் , சித்திவினாயகரும் குடியிருக்கிற மும்பையின் செல்வச் செழிப்பை இந்தியா என்றென்றும் பாடிக்கொண்டிருந்தாலும், இந்நகரத்திலும் உணவுத் தட்டுப்பாடு இருக்கிறதென்கிற செய்தி நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறதல்லவா?


மும்பையிலுள்ள சில பகுதிகளில் வாழுகிற ஏழைகள் போதிய அளவு உணவு பொருட்கள் கிடைக்காமல் மரணமடைகிறார்கள் . மும்பையில் சிவாஜிநகர் பகுதி ஏழை எளியவர்கள் வாழுகிற சுகாதாரமற்ற பகுதியாகும் . இந்தப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதத்திலிருந்து 6வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகிறார்கள் . இதற்கடுத்தது கோவிண்டி என்ற பகுதியில் அதிகமாக நடுத்தர வர்க்கத்தினர்கள் வாழுகிறார்கள் . இதே பகுதியில் ரஹேஜா கட்டுமான வல்லுனர்கள் நிறுவனம் , பெரிய பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் , இடம் பெற்று இருக்கின்றன . மும்பை லோகல் டிரெயின் வேகத்தை குறைத்துக் கொண்டு சி எஸ்டி நிலயத்தில் இருந்து சிவாஜிநகர் பகுதியை கடந்து செல்லுகிறது .

கோணிப்பைகளால் மூடப்பட்ட ஒத்தை செங்கற்ச்சுவர்கள், பிளாஸ்டிக் பைகளால் மூடிய கூரைகளேன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணற்ற குடிசைகள் இந்தப் பகுதியில் இடம் பெற்று இருக்கின்றன . சிவாஜிநகர் பகுதி முழுவதும் சின்ன சின்ன கால்வாய்களாக சாக்கடைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது , அதன் நடுவே விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் . இரயில் சிவாஜிநகரை கடந்து செல்லும்போது அப்படியொரு துர்நாற்றம் , இந்தப்பகுதி மக்கள் அழுக்கோடு வாழுகிறார்கள் . வேறு மாநிலத்தில் இருந்து வருகிற ஏழைமக்கள் மும்பையிலுள்ள இந்தப் பகுதிக்குத்தான் முதன் முதலில் குடிபெயர்கிறார்கள். கொஞ்ச காலத்துக்கு சிவாஜிநகரில் தஞ்சமடைந்து விட்டு கைகளில் காசு கிடைத்தவுடன் வேறு இடத்துக்கு மாறிச் செல்லலாமென்கிற எண்ணத்தோடு இந்த இடத்துக்கு முதன்முதலில் வருகிறார்கள் . நாளாக நாளாக கிடைக்கிற வருமானம் கைக்கும் வாய்க்கும் பத்தாமல் குடிபெயர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக தங்கிவிடுகிறார்கள் . ஒரு சதுரங்கடி நிலம் லட்சரூபாய் மதிப்பைகொண்ட கொலாபாவிலும் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற குடிசைகள் நிறைந்த பகுதியை பார்க்க முடிகிறது . ஒரு பக்கம் அடுக்குமாடிக் கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள் , பணக்காரவர்க்கம் வாழுகிற கொலாபா பகுதியின் மற்றொரு பக்கத்தில் சுகாதாரமற்ற ஏழைமக்களின் குடிசை பகுதியும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் குடியிருக்கிற மக்களுக்கு உணவுப்பண்டங்கள் கிடைப்பதில்லை , அப்படியே கிடைத்தாலும் ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை . மாதத்துக்கு 16 குழைந்தை களிருந்து 25 குழைந்தைகள் மரணமடைகிறார்கள் , குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் சரியான உணவு கிடைக்காமல் உயிர் இழைக்கிறார்கள் .


இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு மலிவான விலையில் ஊட்டச்சத்துள்ள உணவுப்பண்டங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று மாநில அரசு அறிக்கை கொடுத்தாலும் , அதனை நடைமுறைக்கு கொண்டு வருகிற அதிகாரிகளின் கவனக்குறைவால் அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய உணவுப்பண்டங்கள் கிடைக்காமல், அனைத்தும் விரயமாகி அழுகி விடுகிறது , ஏழைகளின் கைகளுக்கு எட்டவிடாமல் இடைத்தாரர்கள் புகுந்து உணவுப்பொருட்களை பறித்துச் செல்லுகிறார்கள் . அப்படியே விநியோகம் செய்தாலும் அந்த மக்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவுபன்டங்கள் கொடுக்கப்படுகிறது . ஊட்டச்சத்து குறைவால் நோய்வாய்பட்ட குழைந்தைகள் , அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்கு சக்தியில்லாமல், படுக்கையில் புழுவைப்போல சுருண்டுகிடந்து உயிர் விடுகிறார்கள் . குச்சிபோல கைகளும் கால்களும், வீங்கிய தொப்பைகளும் கொண்ட குழந்தைகளை பார்க்கும்போது மனம் வலிக்கிறது , எலும்பும் தோலுமாக காட்சி தரும் பெண்மணிகள் , எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடக்கூடிய நிலையிலுள்ள ஆண்கள் என்று , மும்பையின் மறுபக்கத்தினுடைய பரிதாபமான செய்தியைக் கேட்டவர்களுடைய மனம் கனக்கிறது, ஏதோவொரு நெருடல் உறுத்திக் கொண்டிருக்கிறது . அரசாங்கம் பார்த்து ஒரு நல்லவழி செய்ய வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது , முடிந்ததை செய்வதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டுமல்லவா ? இதுதான் ஒரு உண்மையான குடிமகனின் உண்மையான அக்கறை !!!