பெண்களே உங்களுக்களுக்குள்ளே பல மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியாமானது
உலக மகளிர் தினத்தை கொண்டாடிய பெண்மணிகளே !!! நாம் இவ்வளவு நாட்களாக என்னத்தை சாதித்தோம் .... சற்று யோசித்து பாருங்களேன் ..... எப்பப்பார்த்தாலும் ஆண்களை பற்றியே குறை சொல்லிக்கொண்டே இருப்போம் . அவர்கள் மீது ஏதாவது பழி போடாட்டால் நமக்கு தூக்கமே வராது , அவர்களோடு சண்டையும் போடுவோம் , அவர்களையே நச்சரிப்போம் ... அவர்கள் சும்மா இருந்தால் வம்புக்கு இழுப்போம் .... ஏதாவது நொச்நொச்சென்று அவர்களோட மண்டையை போட்டு அரிப்போம் ... எல்லாத்துக்கும் ஆண்கள் பொறுமையா இருப்பார்கள் .... எதுக்கும் வாயே திறக்க மாட்டார்கள் ...... இதைபத்தி நாம் யோசித்து இருப்போமா .... பெண்களே இதைபற்றி யோசிக்கவே இல்லைனா.... இப்பவாது கொஞ்சம் நேரத்தை இதுக்காகவாவது ஒதுக்குங்கள் !!!
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது .... புதுடில்லியிலிருந்து வெளிவருகிற டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்தியாவின் தலைநகரம் புதுதில்லி பெண்களுக்கு பாதுக்காப்பான இடமில்லை என்று கொட்டை எழுத்தில் செய்தியாக வந்தது . சமீபத்த்தில் நிகழ்ந்த நிர்பயாவின் பாலியல் கற்பழிப்பு புதுடில்லியையே அதிர வைத்தது ... பெண்களை பீதிக்குள்ளாகியது .... நிர்பயாவின் மரணம் இந்தியப் பெண்மணிகளின் மரத்துபோன விழிப்புணர்வுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது .... ஆனால் நிர்பயாவுக்கு முன்னால் எத்தனையோ பெண்கள் பாலியல் கற்பழிப்புக்கு உட்படுத்தபட்டிருகிறார்கள் .... இந்த சம்பவத்துக்கு பின்பும் பெண்கள் இம்மாதிரி கொடுமைகளுக்கு ஆளாகியும் வருகிறார்கள் . ஒவ்வொருத்தருக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை தருவது ஒரு நாட்டினுடைய கடமை . ஆனால் நாட்டின் குடிமக்களாகிய நாம் இதை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டாமா ...! அதிலும் பெண்கள் தங்களுடைய உரிமையை ஆண்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். தாங்களாகவே தவறுகளை இழைத்துவிட்டு , ஆண்கள் எங்களை சுதந்திரமாக வாழ விடவில்லைஎன்றும் , எங்களுக்கென்ற சுயமரியாதையை இழந்து விட்டோம்யென்றும், அவர்களுக்கு நாங்கள் ஒரு கைப்பொம்மையாக இருக்கிறோம் .... எங்களுடைய கருத்துக்கள் எடுத்துகொள்ளப் பட வில்லை எனறும் , இன்னும் எத்தனையோ குற்றங்கள் ..... அத்தனையும் கேட்டு கேட்டு சலித்து விட்டதய்யா ..... யாரை குறை சொல்வது ?....
ஆண்களைவிட பெண்கள்தான் தங்களுக்குள் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் . தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு பெண்ணுடைய அழகையோ , திறமையையோ , புத்திசாலித்தனத்தையோ எப்போதும் பாராடியதில்லையே , நாம் எப்போதும் சந்திக்கிற நிகழ்வுகளை கவனித்து பார்ப்போமே .... ஒரு குண்டான பெண் சட்டென்று அறைக்குள் நுழையும்போது இவ எவ்வளவு குண்டாகயிருக்கிரா .... எந்த கடையினுடைய அரிசியை சாப்பிடுகிறா ....நான் அவளைவிட ஒல்லியாக இருக்கிறேன் என்றொரு பெருமூச்சு ..... அதுபோல ஒரு தாய் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடக்கவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஏதோவொரு காரணத்தால் கலந்துகொள்ள முடியாமல் போனதால், அவளைபற்றி மற்ற பெண்கள் இவ என்ன தாய் ?.... என்றொரு கேள்விக்குறி .... ஏன் ஒரு பெண் இன்னொரு பெண்ணை எதிரியாகவே நினைகிறார்கள் .... இப்படிப்பட்ட குணத்தை மாத்திக்கொண்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும் !!!...
அலுவலகத்தில் அன்றாட நிகழும் சம்பவங்கள் ..... பெண்கள், ஆண்களோடு தங்களை சமமாக என்ன வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார்கள் .... அன்றும், இன்றும், எப்போதும் ஆண்கள் பெண்களை குறைத்து எடை போடவில்லை ..... அவர்களை தங்களோடு சமமாகவே எண்ணுகிறார்கள் ..... இதற்கு சின்ன உதாரணம் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் . பிரதான இலக்கை ஒரு குறிப்பிட்ட காலவரையில் முடிப்பதற்காக உயர் அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஆணும் பெண்ணும் சேர்ந்த குழுமத்திடம் சரிசமமாக ஒப்படைகிறார், அதிகாரி பாகுபாடு பார்க்கவில்லை. முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது பெண்கள் அப்படிப்பட்ட சுழ்நிலையிலிருந்து விலகி விடுகிறார்கள் , முடிவுகள் தவறாக ஆகிவிட்டால் உயர் அதிகாரியிடமிருந்து தப்பித்துக்கொண்டு விடலாமில்லையா ..... பெண்கள், அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட உரிமையை தன்னோடு சரிசமமாக பணிபுரியும் ஆணிடம் கொடுத்துவிட்டு , மீண்டும் அவர்களையே குறை சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது .எதையும் எதிர்கொள்கிற சக்தியும் நம்மிக்கையும் இருந்தால்தான் பெண்கள் ஆண்களோடு சரிசமமாக போற்றப்படுவார்கள் , இல்லையேல் வெறும் கைபொம்மை தான் !!!....
அடுத்து சொத்துரிமையில் தங்களுக்கும் பங்குயிருப்பதை உணர வேண்டும். ஒரு பெண், திருமணத்துக்கு பிறகு பிறந்த வீட்டு சொத்தில் எந்த உரிமையும் கிடையாது என்று எண்ணிக்கொண்டிருந்தால், அது அவளுடைய முட்டாள்தனம் . சொத்து கிடைக்கவில்லை என்றாலும் நீதிமன்றக் கதவை தட்டுவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள் , சொந்த அண்ணன் தம்பியோடு சொத்துக்காக சண்டை போடுவதா என்று நினைக்கும் பெண்கள் தங்களோட உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள் .
வீட்டிலும் , பணிபுரியுமிடத்திலும் முடிவுகள் எடுக்கும்போது உங்களுடைய கருத்துகளையும் கேட்கவெண்டும் . இப்படிப்பட்ட சுழ்நிலையை பெண்கள்தான் உருவாக்க வேண்டும் . நமக்கு வேண்டிய தேவைகள் வீட்டில் கிடைக்கிறதென்றும் , அலுவலகம் நமக்கு தவறாது சம்பளம் கொடுக்கிற தென்றும் ,எது எக்கேடு கேட்டுபோனாலுமென்ன என்ற எண்ணத்தோடு இருக்கிற பெண்கள், பிறகு வேதனைப்பட்டோ , வருத்தப்பட்டோமானால் பிரயோசனமில்லை . பெண்களுடைய இப்படியான சால்சாப்பு வியப்பை கொடுக்கிறது .
பிறந்த வீட்டில் அடககமான பெண்ணாகவும் , திருமணத்துக்கு பின்பு கணவனக்கு ஏத்த மனைவியாகவும் , பிள்ளைக்கு ஒரு அன்பு நிறைந்த தாயாகவும் , ஒரு நல்ல சகோதரியாக , தோழியாக என்று பல முகங்களை கொண்டவள்தான் இந்தியப்பெண் , இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதையையும் , உரிமையையும் விட்டுக்கொடுத்தல் கூடாது ... இதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக